10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வரலாறு வினாத்தாள் வெளியானது

மராட்டியத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வரலாறு வினாத்தாள் வெளியானது
Published on

அம்பர்நாத்,

மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் வினாத்தாள் வெளியாவதை தடுக்க கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து இருந்தது.

இருப்பினும் வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று முன்தினம் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தேர்வு நடந்தது.

இந்த தேர்வு தொடங்குவதற்கு முன்னரே கல்யாண் பகுதியில் உள்ள ஒரு பள்ளி மாணவர்களின் வாட்ஸ்-அப்பில் அந்த தேர்வுக்குரிய வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 15 மாணவர்கள் பிடிபட்டனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் டிட்வாலா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றிருந்தார். அங்கு போலீசார் 7 மணி நேரமாக அவரை நிற்க வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதற்காக அவர் சிகிச் சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வினாத்தாள் வெளியானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com