மாற்றுத்திறனாளி மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் - திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

மாற்றுத்திறனாளி மகனை அடித்துக்கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மாற்றுத்திறனாளி மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் - திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருப்பத்தூர்,

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அய்யப்பன் மது அருந்திவிட்டு, ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்து வந்தார். அதனால் மனைவி கோபித்துக்கொண்டு தனது ஒரு மகனையும், ஒரு மகளையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட் டார். மற்றொரு மகன் கார்த்திக் (20) மட்டும் அய்யப்பனுடன் வசித்து வந்தார்.

கார்த்திக் காது கேட்க, பேச இயலாத மாற்றுத்திறனாளியாவார். அவரிடம் சைகை மூலம்தான் பேச முடியும். அந்த சூழ்நிலையிலும் கார்த்திக் கூலி வேலை செய்து சம்பாதித்து வந்தார். மனைவி ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தாலும், கணவன் வீட்டிற்கு அவ்வப்போது வந்து துணிகளை துவைத்து விட்டு சமையல் செய்து வைப்பார். பின்னர் அவரது வீட்டிற்கு சென்று விடுவார்.

கடந்த 2014-ம் ஆண்டு தீபாவளியன்று கணவன் வீட்டிற்கு வந்த மனைவி ஜெயலட்சுமி மகன் கார்த்திக்கிடம் சைகையால் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்திவிட்டு வந்த அய்யப்பன் சைகை மூலம் மகன் கார்த்திக்கிடம் பணம் கேட்டார். அதற்கு கார்த்திக் பணம் தர முடியாது என சைகை மூலம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் அருகில் கிடந்த விறகு கட்டையால் கார்த்திக்கின் தலையில் அடித்தார். படுகாயம் அடைந்த கார்த்திக் பரிதாபமாக செத்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கானது திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரா.ரமேஷ் வாதாடினார்.

இந்த நிலையில் நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து, மகனை கட்டையால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக அய்யப்பனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com