தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,177 பேர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,177 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,177 பேர் மீது வழக்கு
Published on

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், பின் இருக்கையில் அமந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் போலீசாரின் இந்த விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புகையிலை பொருட்கள்

அதன்படி ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 926 பேர், சீட்பெல்ட் அணியாமல் காரில் வந்ததாக 236 பேர், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 15 பேர் என மொத்தம் 1,177 பேர் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர வாகன தணிக்கையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக 13 பேர், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 12 பேர், சூதாடியதாக 2 பேர் என மொத்தம் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com