125 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த பெண் - தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்

கந்தம்பாளையம் அருகே 125 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
125 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த பெண் - தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
Published on

கந்தம்பாளையம்,

கந்தம்பாளையம் அருகே உள்ள ராமதேவம் அடிவேலாம்பாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மனைவி சரோஜா(வயது 55).

இவர் நேற்று நண்பகல் 12 மணியளவில் தங்களின் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் சமீபத்தில் பெய்த மழைக்கு தண்ணீர் எவ்வளவு நிரம்பி உள்ளது என அவர் எட்டி பார்த்துள்ளார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து விட்டார். கிணற்றில் 5 அடி ஆழம் தண்ணீர் இருந்த நிலையில், அவர் கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.

இதனிடையே சரோஜாவை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் தோட்டத்திற்கு வந்து தேடினர். அங்கு அவர் கிணற்றில் தவறிவிழுந்து பரிதவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

அங்கு 125 அடி ஆழ கிணற்றில் 5 அடி உயரத்திற்கு சேறும், சகதியுமாக இருந்த நீரில் தத்தளித்து கொண்டிருந்த சரோஜாவை மீட்க கயிறு கட்டி தீயணைப்பு படையினர் உள்ளே இறங்கினர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அவரை கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர்.

சரோஜாவை உயிருடன் மீட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com