

மங்கலம்,
மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், விசைத்தறி தொழிற்சங்கத்தினருக்கும் இடையேயான போனஸ் ஒப்பந்த பேச்சுவார்த்தை மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி மற்றும் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனசாக 13.15 சதவீதம் வழங்க சமரச ஒப்பந்தம் ஆனது.
கலந்து கொண்டவர்கள்
இந்த போனஸ் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகளான காளியப்பன், வெங்கடாசலம் ஆகியோரும் சி.ஐ.டி.யு -தொழிற்சங்கத்தை சேர்ந்த முத்துச்சாமி, எ.டி.பி -தொழிற்சங்கத்தை சேர்ந்த எஸ்.சுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி -தொழிற்சங்கத்தைச் சேர்ந்த எம்.நடராஜ், எல்.பி.எப் -தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிவசாமி உள்பட பலர்கலந்து கொண்டனர்.