ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 14 பேர் பலி

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 14 பேர் பலியானார்கள்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 14 பேர் பலி
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 14 பேர் பலியானார்கள்.

ராணிப்பேட்டையில் 7 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 3,129 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று 303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 3,748 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com