நாமக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நாளை மறுநாள் வரை நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நாளை மறுநாள் வரை நீட்டிப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரானா வைரஸ் தொற்று நோய் நாமக்கல் மாவட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த உத்தரவானது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த தடைக்காலத்தில் பொதுமக்கள் 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரலாம். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com