திருப்பூர் மாவட்டத்தில் 1,470 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 1,470 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் 1,470 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 114 பேர் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் மாறியிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி வரை நிலவரப்படி மாவட்டத்தில் புதிதாக 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி மொத்தம் 1,470 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com