பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறையில் சிறப்பு முகாம்கள் மூலம் 14,840 பேருக்கு தடுப்பூசி

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறையில் சிறப்பு முகாம்கள் மூலம் 14,840 பேருக்கு தடுப்பூசி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறையில் சிறப்பு முகாம்கள் மூலம் 14,840 பேருக்கு தடுப்பூசி
Published on

வால்பாறை

வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம் பயணிகள் நிழற்குடை, எஸ்டேட் ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 50 மையங்களில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவர் பாபுலட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் தடுப்பூசி முகாம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் பகுதியில் நடந்த முகாமிற்கதான ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் செய்திருந்தார். வால்பாறையில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 1,041 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கிணத்துக்கடவில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 75 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம்களை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, டாக்டர்கள் சமீதா, பிரபு, கவிதா, திலீப்குமார், சிவபிராத்தனா ஆகியோர் கண்காணித்தனர்.

இந்த முகாம்களில் 2,746 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சியில் 2,045 பேருக்கும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 5,013 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 3,995 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 14 ஆயிரத்து 840 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல ஆனைமலை, சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com