ஓமலூர், இளம்பிள்ளை அருகே 150 காளைகள் பங்கேற்ற எருதாட்டம்

ஓமலூர், இளம்பிள்ளை அருகே 150 காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.
ஓமலூர், இளம்பிள்ளை அருகே 150 காளைகள் பங்கேற்ற எருதாட்டம்
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ரெட்டிபட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. பின்னர் காளைகளுக்கு புடவைகாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதன்பின்னர் கோவில் வளாகத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

சீறிப்பாய்ந்தன

அதே போல இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் குபேர விநாயகர் கோவில் அருகில் எருதாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு எருதாட்டம் நடந்தது. காளைகளை மைதானத்தில் அவிழ்த்து விட்டதும் அவைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

இந்த விழாவை காண எலமகவுண்டனூர், சின்னப்பம்பட்டி, நத்தியாம்பட்டி, சூரன்வளவு, கசப்பேறி கோடி, பனங்காட்டூர், கொண்டக்காரனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com