16,281 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16,281 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.
16,281 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16,281 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பெதுத்தேர்வு தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் உள்ள 220 பள்ளிகளை சேர்ந்த 8,715 மாணவர்கள், 8,251 மாணவிகள், 503 தனித்தேர்வர்கள் என மெத்தம் 17,469 பேர் 69 தேர்வு மையங்களில் தேர்வு எழுத இருந்தனர்.

பெதுத்தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கெடுக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் பேலீஸ் பாதுகாப்பு பேடப்பட்டு இருந்தது.

16,281 பேர் எழுதினர்

மாவட்ட முழுவதும் 110 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று நடந்த தமிழ் தேர்வை 1,188 மாணவ, மாணவிகள் எழுதவில்லை. 16,281 பேர் தேர்வு எழுதினர்.

தமிழ் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா மடவாளம் பள்ளி தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மடவாளம் பள்ளியில் தேர்வு எழுதிய ஜீவா என்ற மாணவி மயக்கம்போட்டு விழுந்தார். அப்போது அங்கு ஆய்வு பணிக்கு சென்றிருந்த கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாணவியிடம் உயல் நலம் குறித்து விசாரித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com