வாய்க்கால் தூர்வாருவதற்கு 2 பொக்லைன் எந்திரம்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் வாய்க்காலை தூர்வாருவதற்கு 2 பொக்லைன் எந்திரங்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
வாய்க்கால் தூர்வாருவதற்கு 2 பொக்லைன் எந்திரம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் குளம், வரத்து, வாய்க்கால் தூர்வாரும் பணிகக்காக 2 பொக்லைன் எந்திரங்களை வழங்கி உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர, சக்கரபாணி 2 புதிய பொக்லைன் எந்திரங்களை வழங்கி பேசினார்,

அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மரக்கன்று நடுதல் மற்றும் குளம், வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக 2 பொக்லைன் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் மரம் வளர்ப்பது குறித்து ஒவ்வொரு கிராமமாக ஆய்வு செய்ய உள்ளேன். மேலும் இப்பகுதியில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அதில் முதற்கட்டமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு குளிர்சாதன கிட்டங்கி வசதி அமைத்துத் தர தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ், ஊராட்சி மன்ற குழுதலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்தியபுவனா, ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com