கோடுவெளி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் 2 உயர் கோபுர மின் விளக்குகள்

கோடுவெளி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் 2 உயர் கோபுர மின் விளக்குகள்.
கோடுவெளி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் 2 உயர் கோபுர மின் விளக்குகள்
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் கோடுவெளி கிராமம் பஸ் நிறுத்தம் மற்றும் பெருமாள் நகர் என 2 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் தலா ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்தில் ஊராட்சிமன்ற பொது நிதியில் அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்.எல்.ஏ, ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு உயர்கோபுர மின் விளக்குகளை இயக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வி.ஜே.சீனிவாசன், வெங்கல் பாஸ்கர், நாகலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோடுவெளி எம்.குமார், தாமரைப்பாக்கம் பாஸ்கர், கோடுவெளி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com