காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல்

தமிழக சட்டன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல்
Published on

இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முனியாண்டி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருமுக்கூடலில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com