கஞ்சா விற்ற 20 பேர் கைது; 16 கிலோ பறிமுதல்

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்ற 20 பேர் கைது; 16 கிலோ பறிமுதல்
Published on

மதுரை,

மதுரை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கடும் முயற்சி எடுத்து வருகிறார். மேலும் கஞ்சா விற்பவர்களை பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று முன்தினம் நகர் முழுவதும் கஞ்சா விற்பவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்ற போது, வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது கீரைத்துரை நடுத்தெருவை சேர்ந்த ஜெயபாண்டி(வயது 30), வில்லாபுரம் கண்ணன்(29), தவிட்டுச்சந்தை சதீஷ்(31), சோலையழகுபுரம் பிரேம்குமார்(29), முத்துபாண்டி(29), பாண்டியராஜன் என்பதும், ரவுடிகளான இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவனியாபுரம்

அதேநேரத்தில் சிந்தாமணி பழைய சோதனை சாவடி அருகேயும் கஞ்சா விற்பதாக அவனியாபுரம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் காமராஜர்புரம் யோகேஸ்வரன்(21), அனுப்பானடி சுரேஷ்(32), அஜித்குமார்(24), கீரைத்துறை மணிகண்டன்(20) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தல்லாகுளம் போலீசார் பி.பி.குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(20), சத்தியராஜ்(29), ஆலங்குளத்தை சேர்ந்த விக்னேஷ்பாண்டி(20), மீனாட்சிபுரம் பிரவீன்குமார்(24) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். அந்த நேரத்தில் திருப்பாலை பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற புதூர் சூர்யாநகரை சேர்ந்த மனேஜ்மேனன்(29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

20 பேர் கைது

செல்லூர் போலீசார் வைகை வடகரை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற கீழதோப்பு பகுதியை சேர்ந்த கனகராஜ்(40) என்பவரை கைது செய்தனர். கூடல்புதூர் போலீசார் ஆனையூர் இந்திராநகரை சேர்ந்த முருகன்(59) என்பவரை கைது செய்தனர். சுப்பிரமணியபுரம் போலீசார் பைக்ராவை சேர்ந்த முருகானந்தம்(45), தெப்பக்குளம் போலீசார் கேட்லாக் ரோட்டை சேர்ந்த சேதுராமன்(19), தெற்குவாசல் போலீசார் காஜிமார் தெருவை சேர்ந்த சையது இப்ராகிம்(25) ஆகியோரை கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.

இதன் மூலம் மதுரை நகரில் கஞ்சா விற்றதாக போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக ஒரே நாளில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த சுமார் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com