

சென்னை,
அரசு பஸ்களில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் தெளிவுரையும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பஸ்களிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் எழுதப்பட்டு வருகிறது.
31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இது சுமையாக இருந்தால்கூட, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை. அ.தி.மு.க. அரசால் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனி நிறம்
தமிழகத்தில் இயக்கப்படும் பஸ்களில் 6,262 பஸ்கள் சாதாரண நகர பஸ்கள் ஆகும். அந்த பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு இலவச டிக்கெட் வழங்க தனியாக புதிய நிறத்தில் டிக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நகர பஸ்களை தனியாக அடையாளம் காணும் வண்ணம், புதிய வண்ணம் பூச முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அவரது ஒப்புதலை பெற்று, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்திற்கு 500 மின்சார பஸ்கள் மற்றும் 2 ஆயிரம் டீசல் பஸ்கள் வாங்க ஜெர்மன் கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
22 லட்சம் பயணிகள்
ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு நேற்று முன்தினம் ஒரே நாளில் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
நேற்று முதல் நாள் என்பதால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இனி மக்கள் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.