திருச்சி மாவட்டத்தில் 37 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 2,214 பேர் தேர்வுக்கு வரவில்லை

திருச்சி மாவட்டத்தில் 37 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் 2,214 பேர் தேர்வுக்கு வரவில்லை.
திருச்சி மாவட்டத்தில் 37 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 2,214 பேர் தேர்வுக்கு வரவில்லை
Published on

திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர் மற்றும் ஜெயில் வார்டன் ஆகிய 10,906 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 37 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களுக்கு காலை 8 மணிக்கே தேர்வர்கள் வரத் தொடங்கினர்.

செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணுசாதனங்கள் தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. ஹால் டிக்கெட் இல்லாமல் வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

2,214 பேர் வரவில்லை

அதன்படி தேர்வர்கள் முககவசம் அணிந்தபடி நேற்று தேர்வுக்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். திருச்சி மாநகரில் 11 மையங்களிலும், புறநகரில் 26 மையங்களிலும் என மொத்தம் 37 மையங்களில் தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 880 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 2,214 பேர் தேர்வுக்கு வரவில்லை.

தேர்வு மையத்துக்கு வந்து செல்ல காவல் வாகனம் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் ஆய்வு செய்த மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்வு மையங்களில் தெளிவான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 11 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். 20 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற ரீதியில் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com