நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 24 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 24 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை, வெளிப்பாளையம், பெருங்கடம்பனூர், எறும்புக்கண்ணி, சீர்காழி, செம்மன்குடி, செல்லூர், மாதிரிவேளூர், அளக்குடி, அகரஎலத்தூர், தாண்டவன்குளம், தென்னலக்குடி, பொறையாறு, நல்லாடை சோதனைச்சாவடி மற்றும் வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம், மதுபாட்டில்கள் கடத்தி வந்த வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த பிரேமா (வயது 59), பப்ளிக் ஆபிஸ் சாலையை சேர்ந்த ராணி (41), கொள்ளிடம் அகரஎலத்தூர் பெரிய தெருவை சேர்ந்த சூர்யா (48), தாண்டவன்குளம் காந்தி நகரை சேர்ந்த ஜெயலட்சுமி (48), சீர்காழி தென்னலக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த வனிதா (48), திருத்தல முடையார் கோவில் தெருவை சேர்ந்த அஞ்சம்மாள் (55) ஆகிய 6 பெண்கள் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 595 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com