மாவட்டத்தில் 241 போலீசார் இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் 241 போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் 241 போலீசார் இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீஸ்காரர்கள் வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி விழுப்புரம் நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு மனோகர் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்துக்கும், கோட்டக்குப்பம் போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ்காரர் சந்தோஷ்குமார் எலவனாசூர்கோட்டைக்கும், திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் செல்வக்குமார் ரோசனைக்கும், திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஷாஜகான் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கும், வளத்தி பெண் போலீஸ் தீபாலட்சுமி விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் பாண்டியன் மணலூர்பேட்டைக்கும், திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் குணசேகரன் திருவெண்ணெய்நல்லூருக்கும் இடமாற்றப்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் பாக்கியராஜ் எலவனாசூர்கோட்டைக்கும், திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் தீபன்குமார் ரோசனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீஸ்காரர்கள் என மொத்தம் 241 போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com