

மும்பை,
மராட்டியத்தில் கடந்த மாதம் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று புதிதாக 11 ஆயிரத்து 416 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை வைரஸ் நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 17 ஆயிரத்து 434 ஆக உயர்ந்து உள்ளது.
ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று மட்டும் மாநிலத்தில் 26 ஆயிரத்து 440 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 12 லட்சத்து 55 ஆயிரத்து 779 பேர் தொற்றில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 82.76 ஆக உள்ளது. தற்போது 2 லட்சத்து 21 ஆயிரத்து 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் புதிதாக 308 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 40 பேராக உயர்ந்துள்ளது.