புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது

புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 13 அட்டைப்பெட்டிகளில் 268 மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் ஜெயக்கொடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(வயது 41), பெரம்பலூர் அஞ்சுகம் நகரை சேர்ந்த பாலு (38) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பெரம்பலூருக்கு மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com