ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் 276 ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் 276 ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகளை வனத்துறை யினர் சேகரித்தனர்.
ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் 276 ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர்ரெட்லி ஆமைகள் அதிக அளவு காணப்படு கிறது.

இந்த ஆமைகள் விசைப்படகுகளில் அடிப்பட்டு இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மேலும் கடற்கரையோரம் முட்டையிடும் ஆமைகள் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் இறந்து விடுகின்றன. இதனால் ஆலிவர்ரெட்லி ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆமை இனத்தை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆலிவர்ரெட்லி ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் ஆமைகள் கடலில் இருந்து வெளியே வந்து கரையில் முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்த முட்டைகள் அழியாமல் பாதுகாப்பதற்கு ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட இடங்களில் பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக ஆறுகாட்டுத்துறை கடற்கரையோர பகுதிகளில் ஆமைகள் அதிக அளவில் முட்டையிட்டு செல்கின்றன. இந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். இந்தநிலையில் ஆறுகாட்டுத்துறை கடற்கரையோரத்தில் சேகரிக்கப்பட்ட 276 ஆலிவர்ரெட்லி முட்டைகளை நாகை மாவட்ட வனஉயிரின காப்பாளர் நாகசதீஷ்கிடிசாலா, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் பொரிப்பகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு குஞ்சு பொரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழிகளில் முட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com