தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 282 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 282 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 282 பேர் கைது
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் நேற்று போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிள்களில் சென்ற பலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வரை 282 பேர் கைது செய்யப்பட்டனர். 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தூர் பகுதியில் திடீர் ஆய்வு நடத்திய உதவி கலெக்டர் பிரதாப் தலைமையிலான குழுவினர் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்த ஒரு மளிகை கடைக்கு சீல் வைத்தனர். அதே பகுதியில் பொதுமக்களை அமர வைத்து உணவு வழங்கிய ஒரு ஓட்டல் மூடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com