நெல்லை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வை 2,943 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 943 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
நெல்லை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வை 2,943 பேர் எழுதினர்
Published on

நெல்லை,

தமிழகத்தில் 8-ம் வகுப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிக்கூடங்களில் இந்த தேர்வு நடந்தது.

2,943 பேர் எழுதினார்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிக்கூடங்களில் ஊரக திறனாய்வு தேர்வு எழுத மொத்தம் 3 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 2 ஆயிரத்து 943 பேர் தேர்வு எழுதினார்கள். 397 பேர் தேர்வு எழுதவரவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com