கோர தாண்டவமாடும் 2-வது அலை; தேர்தல் பணியில் ஈடுபட்ட புதுவை போலீசார் 107 பேருக்கு கொரோனா; மாநிலத்தில் புதிதாக 1,258 பேர் பாதிப்பு

புதுவையில் கோர தாண்டவமாடும் 2-வது அலையில் போலீசார் 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரேநாளில் 1,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோர தாண்டவமாடும் 2-வது அலை; தேர்தல் பணியில் ஈடுபட்ட புதுவை போலீசார் 107 பேருக்கு கொரோனா; மாநிலத்தில் புதிதாக 1,258 பேர் பாதிப்பு
Published on

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வீரியமாக உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதுவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் வயதானவர்களை தாக்கிய கொரோனா தற்போது இளைஞர்கள், நடுத்தர வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அரசு ஊழியர்கள், போலீசாரும் கொரோனாவுக்கு இரையாகி வருகின்றனர். புதுவை மாநிலத்தில் தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

107 பேருக்கு கொரோனா

அதாவது கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 776 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆண், பெண் போலீஸ்காரர்கள் என 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்காரர்கள் கலக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் பணியாற்றிய போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி போலீசாருக்கு கொரோனா பரிசோதனையும், தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வருகிற 2-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு நேற்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையை தொற்று துரத்தி வருவதால் போலீஸ்காரர்களை கலக்கமடைய செய்துள்ளது.

10 பேர் பலி

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 6, 833 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,258 பேர் பாதிப்படைந்துள்ளனர். 632 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். அதாவது தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று 67 வயது மூதாட்டி, 48 வயது மற்றும் 47 வயது ஆண், 68 வயது மூதாட்டி, 74 வயது முதியவர், 49 வயது ஆண் ஆகியோரும், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 59 வயது பெண், 50 வயது பெண், 94 வயது முதியவர் ஆகியோரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் 60 வயது மூதாட்டியும் பலியாகி உள்ளனர்.

சாவு 781 ஆக அதிகரிப்பு

மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரத்து 305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,612 பேர் ஆஸ்பத்திரிகளிலும் 6 ஆயிரத்து 832 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 8 ஆயிரத்து 444 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 47 ஆயிரத்து 80 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி

நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 229 பேர், முன் களப்பணியாளர்கள் 58 பேர், பொதுமக்கள் 779 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 73 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com