மதுராந்தகத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு

மதுராந்தகத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுராந்தகத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு
Published on

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 62). இவர் கடந்த 18.6.2021 அன்று கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு பெரியநத்தத்தை சேர்ந்த கார்த்திக் என்கிற முட்ட கண்ணு கார்த்திக் (32) மற்றும் சின்ன நத்தம் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா (29) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக காந்திநகரை சேர்ந்த பிளேடு பிரதாப் (28) என்பவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில்...

மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு பரிந்துரைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com