பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் 22-ந் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு

பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் 22-ந் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
Published on

கரூர்,

கரூர் வெங்கமேட்டில் தங்கியிருந்த மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா ஆகியோர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உதவியாக மதுரையை சேர்ந்த வக்கீல் முருகனும் கைது செய்யப்பட்டார். சந்திரா, கலா ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், வக்கீல் முருகன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி 3 பேரும் திருச்சி சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

வழக்கு தள்ளிவைப்பு

மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் 3 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 22-ந் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார். மேலும் 3 பேருக்கும் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்தார்.

இதைத்தொடர்ந்து சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி திருச்சிக்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com