பிளஸ்-2 பொதுத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் 37,752 மாணவர்கள் தேர்ச்சி

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 37 ஆயிரத்து 752 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் 37,752 மாணவர்கள் தேர்ச்சி
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 37 ஆயிரத்து 752 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

37,752 பேர் தேர்ச்சி

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வு மதிப்பெண் மற்றும் உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.

மேலும் அவை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் 320 பள்ளிகளில் படித்த 37 ஆயிரத்து 752 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 17,418 மாணவர்களும், 20,334 மாணவிகளும் அடங்குவர்.

இணையதளம் மூலம் பார்த்தனர்

மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுக்கான மதிப்பெண் பட்டியல் முடிவுகளை செல்போனில் இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். கல்வித்துறை மூலம் அவர்களுடைய செல்போன் எண்களுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதவிர அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பளிக்கு வந்திருந்த சில மாணவிகள் தோழிகளுடன் சேர்ந்து தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்து தெரிந்து கொண்டனர். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும் அந்தந்த பள்ளிகளிலேயே ஆசியர்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் இந்த மதிப்பெண் பட்டியல் மூலம் உயர் கல்வியில் சேர்வதற்கான முயற்சியில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com