அரும்பாக்கத்தில் விடுதியில் மோதல்: வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று முன்தினம் மாலை அண்ணா நகர், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 23), இசக்கி (22), சுரேஷ்குமார் (26), மோசஸ் (23) ஆகிய 4 பேர் அறை எடுத்து தங்கி, இசக்கியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
அரும்பாக்கத்தில் விடுதியில் மோதல்: வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
Published on

அப்போது பக்கத்து அறையில் தங்கி இருந்த ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்ரிஷ் (23) என்பவர் குடிபோதையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த இவர்களிடம் தகராறு செய்தார். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி

கைகலப்பானது. இருதரப்பினரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து 5 பேரையும் விடுதி நிர்வாகம் வெளியேற்றியது. விடுதி வாசலில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கற்களால் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர்.

இதில் பாலாஜி உள்பட 4 பேரும் கல்லால் அடித்ததில் படுகாயம் அடைந்த பத்ரிஷ், பரிதாபமாக இறந்தார். பின்னர் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலாஜி, இசக்கி, சுரேஷ்குமார், மோசஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com