விக்கிரமசிங்கபுரம், பாப்பாக்குடி பகுதியில் மழைக்கு 4 வீடுகள் இடிந்தன

விக்கிரமசிங்கபுரம், பாப்பாக்குடி பகுதியில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து விழுந்தன.
விக்கிரமசிங்கபுரம், பாப்பாக்குடி பகுதியில் மழைக்கு 4 வீடுகள் இடிந்தன
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருவரது வீடு இடிந்து விழுந்தது. பாப்பாக்குடி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் நத்தம் காலனியை சேர்ந்த பெருமாள் என்பவரின் வீடு நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென்று இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளையை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரெஜினா மேரி. இவர்கள் நேற்று மதியம் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, இவர்களது வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து, பக்கத்து வீடான டெய்லர் சங்கர் என்பவரின் வீட்டின் மேல் விழுந்தது. இதில் அவரது வீடும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கட்டில், மின்விசிறி உள்ளிட்டவை சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்ல.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் முகமதுலப்பை, கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதேபோல் விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் என்பவரின் வீடும் இடிந்து விழுந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com