

கம்பம்:
கம்பம் பகுதியில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக, நிறுவனத்தின் மேலாளர் சாமி (வயது 42) தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கம்பம் காட்டு பள்ளிவாசல் சாலையில் உள்ள நாகூர்கனி என்பவருடைய வீட்டில் போலீஸ் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான போலி பீடி பண்டல்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நாகூர்கனி, அவரது அக்காள் ரம்ஜான்பேகம், தந்தை இப்ராகிம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.