சேலம் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு 4,500 பேர் பங்கேற்பு

சேலம் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 4,500 பேர் பங்கேற்றனர்.
சேலம் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு 4,500 பேர் பங்கேற்பு
Published on

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் 43 அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக பட்டதாரிகள், பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்தோர் என 16 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அலுவலக உதவியாளர்கள் பணியிடத்திற்கான நேர்முக தேர்வு சேலம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள 8 ஆயிரத்து 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். 3 ஆயிரத்து 900 பேர் பங்கேற்கவில்லை.

இன்று நடக்கிறது

இதையடுத்து பங்கேற்றவர்களுக்கான நேர்முக தேர்வு மாவட்ட நீதிபதி மோகன்ராஜ் மேற்பார்வையில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வுக்கு வந்தவர்கள் அந்தந்த கோர்ட்டு முன்பு வரிசையாக உட்கார வைக்கப்பட்டு இருந்தனர்.

அதிகமான நபர்கள் நேர்முக தேர்வுக்கு வந்ததால் சேலம் கோர்ட்டில் துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (ஞாயிற்றுக் கிழமை) 8 ஆயிரத்து 400 பேருக்கு நேர்முக தேர்வு நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com