நாமக்கல் தீயணைப்புத்துறை சார்பில் தினசரி 4,800 லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தீயணைப்புத்துறை சார்பில் அரசுத்துறை அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் தீயணைப்புத்துறை சார்பில் தினசரி 4,800 லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு
Published on

நாமக்கல்,

முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தற்போது 2-ம் கட்டமாக இந்த மாதம் 1-ந் தேதி முதல் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இப்பணி வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய இருப்பதாகவும், தினசரி 4,800 லிட்டர் வீதம் கிருமிநாசினி மருந்து 2 வாகனங்கள் மூலம் தெளிக்கப்பட்டு வருவதாகவும் நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com