வேலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவர்கள் எழுதினர்; தேர்வு மையத்தை மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டார்

வேலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய மாணவிகளை படத்தில் காணலாம்.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில் தகுதியை நிர்ணயிக்கும் வகையிலான திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 536 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொய்கை, சேர்க்காடு, கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தேர்வு காலை 10 முதல் 12 மணி வரை நடந்தது.

497 மாணவர்கள் பங்கேற்பு

தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் காலை 9 மணி முதல் வரத் தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 9.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அனைத்து மாணவ-மாணவிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவ-மாணவிகள் எழுதினர். 39 பேர் பங்கேற்கவில்லை.

அதிகாரி பார்வையிட்டார்

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார். தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com