டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 5 பேர் பணி இடைநீக்கம்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 5 பேர் பணி இடைநீக்கம்
Published on

தர்மபுரி:-

தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களில் பலர் மதுபான வகைகளை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 20 விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. இவர்களில் ஏற்கனவே புகாருக்குள்ளான 5 விற்பனையாளர்கள் பணிஇடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். 15 விற்பனையாளர்கள் வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com