குரூப்-2 தேர்வை 63,437 பேர் எழுதுகின்றனர்

சேலம் மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை 63 ஆயிரத்து 437 பேர் எழுதுகின்றனர் என்று முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
குரூப்-2 தேர்வை 63,437 பேர் எழுதுகின்றனர்
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை 63 ஆயிரத்து 437 பேர் எழுதுகின்றனர் என்று முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் குரூப்- 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்- 2 மற்றும் 2 ஏ தேர்வு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. மாவட்டத்தில் 161 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 218 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

63,437 பேர் எழுதுகின்றனர்

மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 63 ஆயிரத்து 437 பேர் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிப்பதற்காக 12 பறக்கும் படைகளும், 55 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு எழுத வரும் தேர்வர்கள் அனைவரும் தங்களது அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) கட்டாயம் எடுத்துவர வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதக்கூடிய 9 தேர்வு கூடங்கள் பதற்றம் நிறைந்த கூடங்களாக தேர்வு செய்யப்பட்டு அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், கூடுதல் வீடியோ கேமரா பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், உதவி கலெக்டர்கள் சரண்யா, வேடியப்பன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com