

இந்தநிலையில் சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குட்கா புகையிலை பாக்கெட் பண்டல்களுடன் 2 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் கோயம்பேடு தெற்குமாட வீதியைச் சேர்ந்த முஸ்தாக் அகமது (வயது 22), முகமது உசேன் (22) என்பதும், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா புகையிலை பொருட்களை கடத்திவந்து சென்னையில் உள்ள கடைகளில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. அவர்கள் வசித்த வாடகை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் சிக்கின. அதையும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்