பிரபல வங்கியில் 760 நிர்வாக அதிகாரி பணிகள்

தொழில் வளர்ச்சி வங்கியில் 760 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டதாரி இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரபல வங்கியில் 760 நிர்வாக அதிகாரி பணிகள்
Published on

இந்திய தொழில் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கியில் தற்போது நிர்வாக அதிகாரி (எக்சிகியூட்டிவ்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பல்வேறு கிளைகளில் மொத்தம் 760 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1993 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.700-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.150-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.idbi.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com