

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் ராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் மேல்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குண்டுப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பனை செய்த குமார் (வயது 43) ராஜா (48), சாமிதுரை (46), மதியழகன் (48), கிருஷ்ணமூர்த்தி (52), மருதப்பன் (70) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் பழனி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது பஸ்நிலையம் அருகில் புதுதாராபுரம் சாலை பிரிவில் மதுபானம் விற்ற ஆயக்குடி ஒபுளாபுரத்தை சேர்ந்த மூர்த்தி (37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாலைப்புதூரில் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சுந்தரம் (54) என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.
அவருடைய வீட்டில் அட்டை பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.