

சிவகங்கை
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம் மூலமாக சமுதாயத்திலே ஏழை பெண்களிடையே கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்திலும், இளம் வயது திருமணத்தை தவிர்த்திடவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவும், 12-ம் வகுப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரமும், உடன் 8 கிராம் தங்கம் தாலி செய்வதற்கும் திருமண நிதிஉதவியாக அப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்காக ரூ.50 ஆயிரமும், உடன் 8 கிராம் தங்கம் தாலி செய்வதற்கு அப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் ரூ.85 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2011-12-ம் நிதியாண்டில் திருமண உதவித்திட்டங்களின்கீழ் 2 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கத்துடன் கூடிய நிதியுதவி ரூ.8 கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2012-13-ம் நிதியாண்டில் 4 ஆயிரத்து 159 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரம் நிதிஉதவியும், 2013-14-ம் நிதியாண்டில் 3 ஆயிரத்து 219 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2014-15-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 902 பயனாளிகளுக்கு நிதிஉதவி ரூ.10 கோடியே 65 லட்சம் நிதிஉதவியும், 2015-16-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2016-17-ம் நிதியாண்டில் 3 ஆயிரத்து 59 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2017-18-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 247 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.