வயல்களில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 மயில்கள்

அரியலூர் அருகே வயல்களில் 9 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயல்களில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 மயில்கள்
Published on

தாமரைக்குளம்,

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கிராமத்தில் செல்வராஜ் மற்றும் ரெங்கநாதன் ஆகியோரின் வயல்களில் 3 ஆண், 6 பெண் என 9 மயில்கள் மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனசரகர் கணேசன், வனவர் சக்திவேல், வனகாப்பாளர்கள் சந்திரசேகரன், தனவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மயில்களை மீட்டு விசாரணை நடத்தினர். விளைநிலங்களிலுள்ள பயிரை மயில்கள் சேதப்படுத்துவதால் ஆத்திரத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் விஷம் வைத்து கொன்றனரா? அல்லது வேறு தேவைகளுக்காக கொல்லப்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயில்கள் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய, கால்நடை மருத்துவருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சி

நமது நாட்டின் தேசியப்பறவையான மயில்கள் அரியலூர் அருகே இறந்து கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com