திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டன - கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டன - கலெக்டர் சிவன்அருள் தகவல்
Published on

திருப்பத்தூர்,

கொரோனா தொற்று பரவலால் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் அறிவுரையின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களுக்கு உட்பட்ட 195 வருவாய் கிராமங்களிலும் 15-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் சமூக விலகலை கடைப்பிடித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

மொத்தம் 9,756 மனுக்கள் பெறப்பட்டு, 1,828 மனுக்கள் ஏற்கப்பட்டன. 7,913 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பரிசீலனையில் உள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் ஆய்வு செய்து, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முகாம் நடத்தப்படவில்லை.

இந்தத் தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com