

வேலூர்,
வேலூரில் கடந்தசில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் 98 டிகிரியும், நேற்று 99.5 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10 மணியளவில் திடீரென இடி- மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது.
சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் தூறிக்கொண்டே இருந்தது. இடி-மின்னலுடன் மழைபெய்யத் தொடங்கியதும் வேலூர் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நகரமே இருளில் மூழ்கியது.