தந்தைக்காக ஒரு புத்தகம்

கார்கில் போரில் வீர மரணமடைந்த தந்தையின் வீரதீர செயல்களையும், அவர் மீது கொண்டிருக்கும் பாசத்தையும் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார், அபராஜிதா ஆச்சாரியா.
தந்தைக்காக ஒரு புத்தகம்
Published on

அபராஜிதா ஆச்சாரியாவின் தந்தை பத்மபாணி ஆச்சாரியா, கார்கில் போரில் ராணுவத்தை வழிநடத்தி சென்ற அதிகாரிகளில் முக்கியமானவர். கார்கில் போரில் அவரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி நாட்டின் இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

கார்கில் போரில் பத்மபாணி இறந்தபோது அபராஜிதா மூன்று மாத கைக்குழந்தையாக இருந்திருக்கிறார். இறந்துபோன தந்தையின் 50-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவெடுத் தவர், புத்தகமாக வடித்து விட்டார். அந்த புத்தகத்தில் ராணுவத்தில் பணியாற்றிய போது பத்மபாணி தனது குடும்பத் தினருக்கு எழுதிய கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் அவரது வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

என் தந்தையின் நினைவை புத்தகமாக பதிவு செய்ய ஆசைப்பட்டேன். அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது வீட்டுக்கு எழுதிய கடிதங்கள் நிறைய இருந்தன. அதனை பத்திரப்படுத்தி வைத்திருந்தோம். அதனுடன் புகைப்படங்களையும் தொகுத்து ஆவணமாக்கியிருக்கிறேன் என்கிறார்.

அபராஜிதாவுக்கு 19 வயதாகிறது. ஐதராபாத்தில் தாயாருடன் வசித்து வருகிறார். தந்தையின் பிரிவையும், அவர் மீது கொண்டிருக்கும் நேசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தயாரித்திற்கும் இந்த புத்தகத்திற்கு ராணுவ வீரர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஐதராபாத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஏராளமான ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

புத்தகத்தை வெளியிட்ட மேஜர் ஜெனரல் ராவ், மேஜர் பத்மபாணி ஆச்சாரியா ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கும் முன்மாதிரியாக விளங்கு கிறார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com