

அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தகுதிச்சான்று முடிந்த, சாலை வரி கட்டாத, அனுமதிக்கு புறம்பான வாகன இயக்கம் மற்றும் பல குற்றங்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் 9 தனியார் நிறுவன வாகனங்கள் உள்பட மொத்தம் 17 வாகனங்களுக்கு இணை கட்டணவசூல் மற்றும் நிர்ணய ரூ.1 லட்சத்து 97 ஆயிரம், சாலைவரி இலக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 4 வாகனங்கள் தகுதிச்சான்று இல்லாதது மற்றும் சாலை வரி கட்டாதது போன்ற குற்றங்களுக்காக பறிமுதல் செய்து மப்பேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.