ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 1,250 படுக்கைகள்; ‘டீன்’ பாலாஜி தகவல்

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின்போது ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 6,993-ஆக இருந்தது.
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 1,250 படுக்கைகள்; ‘டீன்’ பாலாஜி தகவல்
Published on

ஆனால் 2-வது அலையின்போது ஒரு நாள் பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை அதிகரிக்க அவசர தேவை உள்ளது. இதனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-

ஏற்கனவே இங்கு 3 பிரிவுகளில் 1,200 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க உயர் சிகிச்சை கட்டிடத்தில் 6 தளங்களும், புதிய அவசர சிகிச்சை கட்டிடத்தில் 6 தளங்களும் கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 1,250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.அவற்றில் 900 ஆக்சிஜன் படுக்கைகள் ஆகும். மேலும் இங்கு, கூடுதலாக ஆக்சிஜன் நிரப்பும் வசதியும், கழிவறை மற்றும் பிற வசதிகளும் அடங்கும். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கூடுதலாக 4 கொரோனா

பராமரிப்பு மையங்களும், 4 பரிசோதனை மையங்களும் நிர்வகித்து வருகிறது. கொரோனா நோயாளிகளை கண்காணிக்க இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com