மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முதல் முறையாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முதல் முறையாக கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முதல் முறையாக நடைபெற்றது
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தால் விவசாயிகள், தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் அளித்தனர். காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் கோபி கணேசன், பொருளாளர் மதியழகன், நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

92 மனுக்கள்

அப்போது கோரிக்கை குறித்து கோபிகணேசன் கலெக்டரிடம் விளக்கி பேசினார். தரங்கம்பாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் நிவாரணம் முழுமையாக வரவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்த முகாமில் 92 மனுக்கள் பெறப்பட்டன. ஒரு பயனாளிக்கு முதியோர் ஓய்வூதிய ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். முகாமில் மாவட்ட துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு துறை) வாசுதேவன், கலெக்டர் அலுவலக மேலாளர் சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் சீனிவாசன் வரவேற்று பேசினார். விழாவில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. மேலும் 3 சக்கர சைக்கிள்கள், காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்ட உபகரணங்களும் மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தம் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாயூரம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியக்குழு தலைவி காமாட்சி, ஒன்றியக்குழு துணைத்தலைவி மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முடநீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com