ஏலியனுக்கு பிரமிடு கட்டியவர்

மெக்சிகோவைச் சேர்ந்த விவசாயி ரேமுன்டோ கோரோனா. 22 அடிகள் உயரம் கொண்ட அஸ்டெக் பிரமிடு ஒன்றை மெக்சிகோ, அமெரிக்கா எல்லையில் உள்ள பாலைவனத்தில் கட்டியிருக்கிறார்.
ஏலியனுக்கு பிரமிடு கட்டியவர்
Published on

30 ஆண்டுகளுக்கு முன்பு வேற்று கிரக மனிதர் ஒருவர் வந்து, இந்தப் பிரமிடை உருவாக்கச் சொன்னதாகச் சொல்கிறார் ரேமுன்டோ.

ஒரு நாள் என் வீட்டுக்கு மிக உயரமான மனிதர் ஒருவர் வந்தார். அவரது கண்கள் தேன் நிறத்தில் மின்னின. வெள்ளை முடி. தன்னுடைய பெயரை ஹெருலேகா என்றும் நெப்லின் என்ற கிரகத்தில் இருந்து வருவதாகவும் சொன்னார். நம் பூமியை விட 20 மடங்கு பெரிதான கிரகம். ஓரியன் விண்மீன் தொகுப்பில் அது இருக்கிறது என்றார். அப்போது எனக்கு 33 வயது.

அடுத்ததாக என் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்த நேரத்தில் என் கனவில் அந்த வேற்று கிரக மனிதர் தோன்றினார். அடுத்த சில நாட்களில் என் வீட்டின் கதவை அதே மனிதர் தட்டினார். நான் பயந்து ஓடினேன். என்னைத் தடுத்தார். கடவுளா? என்று கேட்டேன். நான் உன்னைப் போல ஒரு மனிதன் என்றார்.

அவர்தான் இந்தப் பிரமிடைக் கட்டச் சொன்னார். காற்று, மழை, புயலால் சேதமடையாத, வானை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரமிடைத் தனக்காக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் கிரகத்தில் பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிறார் ரேமுன்டோ.

பிரமிடு கட்டுவது மிகவும் கடினமான பணி. இதற்காக பல்வேறு கணிதங்களை போட வேண்டியிருக்கும். அதுவும் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ரேமுன்டோவால் அந்த கணக்குகள் போடுவது எளிதல்ல. இதை எவ்வாறு ரேமுன்டோவால் கட்டி முடிக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை அஸ்டெக் மக்களின் வழிதோன்றல் என்பதால், மரபணுவிலேயே இந்தத் திறமை இருந்திருக்குமோ? என்று ஆச்சரியப்படுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com