அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் : 2,157 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் - எடியூரப்பா அறிக்கை

பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் : 2,157 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் - எடியூரப்பா அறிக்கை
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் 162 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் முதல்-மந்திரியோ அல்லது மந்திரிகளோ மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநிலத்தில் 2,157 கிராமங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களின் மக்கள் வெளியூர்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ளனர். கர்நாடக இயற்கை பேரிடர் நிர்வாக மையத்தின் அறிக்கைப்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. அடுத்த 15 நாட்களில் நிலைமை இன்னும் படுமோசமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல், முதல்-மந்திரி மற்றும் பெரும்பாலான மந்திரிகள் ரெசார்ட் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டனர்.

பெங்களூருவிலும் குடிநீர் பிரச்சினை தீவிரமாக உள்ளது. தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com