கோடியக்கரையில் கட்டுமரத்துடன் கூடிய சிறிய தேர் கரை ஒதுங்கியது

கோடியக்கரையில் கட்டுமரத்துடன் கூடிய சிறிய தேர் கரை ஒதுங்கியது.
கோடியக்கரையில் கட்டுமரத்துடன் கூடிய சிறிய தேர் கரை ஒதுங்கியது
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இலங்கை, மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அடிக்கடி படகுகள், மூங்கில் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கரை ஒதுங்குவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே கட்டுமரத்துடன் சிறிய தேர் ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் அங்கு வந்து ஏராளமான பொதுமக்கள் அதனை பார்த்து சென்றனர்.

இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய

இதுகுறித்து கோடியக்கரை மீனவர் சங்க முன்னாள் செயலாளர் சித்ரவேலு கூறியதாவது:-

கோடியக்கரை கடற்கரை பகுதியில் இலங்கை பைபர் படகுகளும், மியான்மர் பங்களாதேஷ் மூங்கில் படகுகளும், மேலும் பல்வேறு பொருட்களும் அடிக்கடி கரை ஒதுங்கும். அதேபோல் நேற்று கட்டுமரத்துடன் கூடிய சிறிய தேர் கரை ஒதுங்கி உள்ளது.

மியான்மர் நாட்டில் இறந்து ஈமகிரியை முடிந்து பின்பு 16-ம் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இறந்தவர்களின் சாம்பலை கலசத்தில் வைத்து அதில் தேங்காய், அரிசி, பழம், இனிப்பு வகைகள் வைத்து அதன் மேல் சிறிய தேர் அமைத்து அதனை ஒரு சிலர் படகில் வைத்தும், சிலர் கட்டுமரத்தில் வைத்தும் கடலில் விடுவது வழக்கம். அதேபோல் இந்த கட்டு மரமும் இறந்தவரின் ஆத்மாசாந்தி அடைய விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com